உயர்தர சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது: விஜித ஹேரத்
நாட்டுக்கு வருகை தரும் உயர்தர உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை சிறிலங்கா அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "அளவைப் போலவே சுற்றுலாத் துறையிலும் தரத்தை அதிகரிக்க வேண்டும். இத்துறையில் தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது, "என்று அவர் கூறினார். சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டுக்கு வருகை தரும் உயர்தர உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை சிறிலங்கா அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"அளவைப் போலவே சுற்றுலாத் துறையிலும் தரத்தை அதிகரிக்க வேண்டும். இத்துறையில் தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது, "என்று அவர் கூறினார்.
சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.