ஜனாதிபதி திசாநாயக்க வியட்நாம் பயணம்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாம் சோசலிச குடியரசுக்கான உத்தியோகப்பூர்வப் பயணத்தை ஆரம்பித்து வியட்நாம் நோக்கி பயணமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது வியட்நாம் ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதமருடன் ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
மே 6 ஆம் திகதி ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பிதானா விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதான உரையாற்றவுள்ளார்.