Breaking News
அடுத்த மாதம் மும்பையில் டெஸ்லாவின் முதல் காட்சிக்கடை திறப்பு
டெஸ்லா அடுத்த மாதம் மும்பையில் தனது முதல் காட்சிக்கடையைத் (ஷோரூம்) திறக்க உள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் சீனாவில் விற்பனை குறைந்து வரும் நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த முயல்வதால், டெஸ்லா அடுத்த மாதம் மும்பையில் தனது முதல் காட்சிக்கடையைத் (ஷோரூம்) திறக்க உள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் தனது முதல் காட்சிக்கடை மும்பையிலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகன நிறுவனமான அமெரிக்கா, சீனா மற்றும் நெதர்லாந்தில் இருந்து சூப்பர்சார்ஜர் பாகங்கள், கார் பாகங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.