சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது; ஜனாதிபதி அநுரகுமார
வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும்.சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் 10-06-2025 அன்று நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு,தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது.எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும்.
இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் . அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது. இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.
சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர்.இதுவே உண்மை. சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்ச_ட்டு வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது.மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கொன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது.
வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும்.சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும்.
பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.