சிறிலங்காவின் எரிசக்தி எதிர்காலத்திற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
அமெரிக்க தூதுவர் சிறிலங்காவின் எரிசக்தி எதிர்காலம் மற்றும் கட்டுப்படியாகும் தன்மை, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்க-சிறிலங்காவின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து கலந்துரையாடினார்.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், சிறிலங்காவின் எரிசக்தி எதிர்காலத்திற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் நாட்டில் காலநிலை தழுவல், சக்தி மாற்றம் மற்றும் விவசாய நிலைபேண்தல் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியுடனான சந்திப்பின் போது, அமெரிக்க தூதுவர் சிறிலங்காவின் எரிசக்தி எதிர்காலம் மற்றும் கட்டுப்படியாகும் தன்மை, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்க-சிறிலங்காவின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து கலந்துரையாடினார்.
'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் பதிவிட்ட தூதுவர் சுங், "யுஎஸ்எய்ட் சிறிலங்கா மூலம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் காலநிலை தழுவலை இயக்குதல், கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வட்ட பொருளாதார முன்முயற்சிகள் மற்றும் பசுமை நிதியுடன் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் - பசுமையான, வலுவான எதிர்காலத்தை ஒன்றாக கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் சிறிலங்காப் பங்காளர்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்."