அதர்வா - மணிகண்டன் இணைந்து மிரட்டும் 'மத்தகம்'

திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை தமிழில் அசலாக தயாராகும் இணைய தொடர்களுக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழில் அசல் இணைய தொடராக தயாராகும் புதிய க்ரைம் திரில்லர் ஜேனரிலான இணைய தொடர் 'மத்தகம்'. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இணைய தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
'கிடாரி' எனும் திரைப்படத்தை இயக்கியவரும், 'குயின்' எனும் இணைய தொடரின் இயக்குநருமான பிரசாத் முருகேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய இணைய தொடர் 'மத்தகம்'. இதில் அதர்வா, மணிகண்டன், கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எட்வின் சகாய் ஒளிப்பளிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த இணைய தொடர் டிஸ்னி பிளஸ் ஹொட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இந்த இணையத் தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கும்- குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ஒருவருக்கும் இடையேயான மோதல் விறுவிறுப்பாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.