உரிமையாளர்கள் அல்லாதவர்களில் 76% பேருக்கு வீட்டுச் சந்தைக்கான நுழைவு எட்டாததாக உள்ளது
அதிக வட்டி விகிதங்களைக் கையாள்வதால் தற்போதைய வீட்டு உரிமையாளர்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று சிஐபிசி கூறுகிறது.

சிஐபிசிக்காக நடத்தப்பட்ட ஒரு புதிய கருத்துக் கணிப்பில், சொந்தமாக சொத்து இல்லாத 76 சதவீத கனேடியர்கள் வீட்டுச் சந்தைக்குள் நுழைவது எட்ட முடியாததாக உணர்கிறார்கள் என்று கூறுகிறது.
பிப்பிரவரியில் நடத்தப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்பில், உரிமையாளர்கள் அல்லாதவர்களில் 70 சதவீதம் பேர் தங்கள் வீட்டு உரிமையாளர் இலக்கை அடைவதற்கான முக்கிய தடைகளில் ஒன்றாக அதிக விலை சந்தைகளை மேற்கோள் காட்டினர். அதே நேரத்தில் 63 சதவீதம் பேர் முன்பணம் செலுத்துவதற்குச் சேமிக்க இயலாமையை மேற்கோள் காட்டினர்.
உரிமையாளர்கள் அல்லாதவர்களில் 55 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தின் பரம்பரை அல்லது பரிசுடன் மட்டுமே ஒரு புதிய வீட்டை வாங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
அதிக வட்டி விகிதங்களைக் கையாள்வதால் தற்போதைய வீட்டு உரிமையாளர்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று சிஐபிசி கூறுகிறது.
மாறுபடும் விகித அடமானதாரர்களில் 51 சதவீதம் பேர் அன்றாட செலவுகளைக் குறைப்பதாகக் கூறினர். அதே நேரத்தில் 21 சதவீதம் பேர் தங்கள் அடமானத்திற்கு மொத்தத் தொகையைச் செலுத்துகிறார்கள் என்று வங்கி கூறுகிறது.
நிலையான விகித அடமானங்களைக் கொண்ட வீட்டு உரிமையாளர்களில் 45 சதவீதம் பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் கடன்கள் புதுப்பிக்கப்படும்போது தினசரி செலவுகளைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.