சிறிலங்காவின் தேர்தல் முறைமையை திருத்துவதற்கான சட்ட வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய பரிந்துரைகளுடன் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
160 பாராளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களிலிருந்து நேரடியாக தெரிவு செய்வதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார தேர்தல் முறைமைக்கு அமைய தெரிவு செய்வதற்கும் தேவையான சட்டங்களை தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் முழுமையான ஜனநாயக தேர்தலை அடைவதற்கும் தற்போதைய தேர்தல் முறைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய பரிந்துரைகளுடன் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
160 பாராளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களிலிருந்து நேரடியாக தெரிவு செய்வதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறைமைக்கு அமைவாக தேசிய அல்லது மாகாண மட்டத்தில் தெரிவு செய்வதற்கும் குழுவிடம் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கம் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேர்தல் முறைமையை திருத்தம் செய்வதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைக் கவனத்திற் கொண்டு தேவையான சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.