நெதன்யாகுவின் அரசியல் நிலைப்பாடு மாற வேண்டும்: ஜோ பைடன்
இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார். இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக "ஹமாசை அழித்துப் பிணைக் கைதிகளை மீட்கும் இஸ்ரேலின் இலக்கை அமெரிக்கா ஆதரிக்கிறது. இருப்பினும், காசா போருக்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து நட்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன" என்று நெதன்யாகு குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.