Breaking News
காசாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் இந்தியா வாக்களிப்பு
மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் பொதுசபையின் (UNGA) அவசரகால அமர்வில் இந்தியா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

காசாவில் உடனடி போர்நிறுத்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்துள்ளது. முன்னதாக காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்' என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் பொதுசபையின் (UNGA) அவசரகால அமர்வில் இந்தியா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்தியா உட்பட 153 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரியா உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன மற்றும் அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின.