Breaking News
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படம் வெளியானது
நடிகர் நாசரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார், அவர் ஊடகங்களிடம் பேசுகையில், படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படம் திரையரங்கில் வெளியானது
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டர் முன்பு கமல்ஹாசனின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நடிகர் நாசரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார், அவர் ஊடகங்களிடம் பேசுகையில், படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஷங்கர், கமல் சார் நிறைய வியப்பு கொடுப்பார்கள் என்று தெரியும். நான் படம் பார்க்க செல்லும்போது, நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆச்சரியங்கள் பிடிக்கும்”. என்றார்.