Breaking News
மேம்பாலத்தில் வாகனம் மோதியதில் 26 வயது இளைஞர் பலி
நெடுஞ்சாலை 404 மற்றும் ஃபின்ச் அவென்யூவில் இந்த வாகன மோதல் ஏற்பட்டது.

ரொறன்ரோவில் திங்கட்கிழமை இரவு பாலம் மேம்பாலத்தில் வாகனம் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக ஒன்றாரியோ மாகாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை 404 மற்றும் ஃபின்ச் அவென்யூவில் இந்த வாகன மோதல் ஏற்பட்டது. இரவு 8.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்
ஒன்றாரியோ மாகாணக் காவல்துறையினர் ஒரு ட்வீட்டில், வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டபோது அவர் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறினர். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.