Breaking News
லெபனானில் இருந்து 55 இலங்கையர்கள் வெளியேற்றம்
கடைசியாக 26 பேர் கொண்ட குழு டிசம்பர் 04 ஆம் திகதி மாலை கொழும்பை வந்தடைந்ததாக பெய்ரூட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள சிறிலங்காத் தூதரகம், பன்னாட்டுப் புலம்பெயர்வு அமைப்புடன் இணைந்து லெபனானில் இருந்து மொத்தம் 55 பாதிக்கப்படக்கூடிய சிறிலங்காத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் வெளியேற்ற ஏற்பாடு செய்துள்ளது.
கடைசியாக 26 பேர் கொண்ட குழு டிசம்பர் 04 ஆம் திகதி மாலை கொழும்பை வந்தடைந்ததாக பெய்ரூட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள பன்னாட்டுப் புலம்பெயர்வு பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு வழங்கிய ஆதரவை பாராட்டுவதாகவும், லெபனானில் பதட்டமான நிலைமை இருந்தபோதிலும் மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து உதவுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்ப்பதாகவும் லெபனானில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.