கோரே கெவின் செலிக் மரணம் குறித்து கியூபெக் காவல்துறை ஒருதலைபட்சமான அறிக்கையை வழங்கியது: மேல்முறையீட்டு நீதிமன்றம்
விசாரணை நீதிபதி சட்டத்தில் தவறு செய்யவில்லை என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றம், மாகாணத்தின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான சுயாதீன விசாரணை அலுவலகம் (பியூரோ டெஸ் என்குவெட்டஸ் இன்டெபென்டாண்டஸ், பீஈஐ-BEI), ஒரு இளைஞனின் மரணம் சம்பந்தப்பட்ட மான்ட்ரியல் பொலிஸ் தலையீடு பற்றிய அதன் விளக்கத்தில் "பக்கச்சார்பற்ற தன்மை" இல்லை என்று கண்டறிந்த தீர்ப்பை நிலைநிறுத்துகிறது.
2021 ஆம் ஆண்டில், 28 வயதான கோராய் கெவின் செலிக்கின் குடும்பத்தினர் தங்கள் மகனின் மரணத்திற்கு முந்தைய தருணங்களை விவரிக்கும் ஒரு பக்கச்சார்பான செய்திக்குறிப்பை வெளியிட்டதற்காகச் சுயாதீன விசாரணை அலுவலகம் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் வெற்றி பெற்ற அந்த குடும்பத்திற்கு 30,000 டாலர் நஷ்டஈடு வழங்கப்பட்டது. ஆனால் அது மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர், 2023 டிசம்பரில், நீதி அமைப்பு மீண்டும் செலிக்குகளுக்கு ஆதரவாக இருந்தது. நீதிபதி சைமன் ரூயல் விசாரணை நீதிபதியின் மதிப்பீடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சுயாதீன விசாரணை அலுவலகச் செய்திக்குறிப்பு ஒருதலைப்பட்சமானது என்றும் தீர்ப்பு நியாயமானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
"விசாரணை நீதிபதி சட்டத்தில் தவறு செய்யவில்லை என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. செய்திக்குறிப்பு அதிகாரிகளுக்கு ஆதரவாக இருந்தது என்பதை [அது] கண்டறிந்துள்ளது, இதைத்தான் செலிக் குடும்பம் நீண்ட காலமாக கூறி வந்தது" என்று குடும்பத்தின் வழக்கறிஞர் பிராங்கோயிஸ் மைன்குய் சனிக்கிழமை சிடிவி நியூசுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.