மஹிந்த சிறிவர்தனவுக்கு நிதிச் செயலாளராக சேவை ஓராண்டுக்கு நீடிப்பு
திறைசேரியின் செயலாளராக தனது சேவைக் காலத்தை இம்மாதம் நிறைவு செய்யும் திரு சிறிவர்தன, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறியிருந்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு ஓராண்டுக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால நீட்டிப்பு 2024 ஏப்ரல் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவையின் பின்னர் இலங்கை மத்திய வங்கியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெள்ளிக்கிழமை (26) சிறிவர்தன அறிவித்தார். மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி வகித்தார்.
எவ்வாறாயினும், திறைசேரியின் செயலாளராக தனது சேவைக் காலத்தை இம்மாதம் நிறைவு செய்யும் திரு சிறிவர்தன, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறியிருந்தார்.
திறைசேரியின் செயலாளராகவும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளராகவும் அவருக்கு ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கப்படும்.