அமெரிக்க உதவிச் செயலாளர் லிஸ் அலன் சிறிலங்கா வருகை
தீவு தேசத்தின் செழிப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆராய்வார் என்று சுங் மேலும் கூறினார்.
அமெரிக்க எலிசபெத் எம்.அலன் அலுவல்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு சிறிலங்கா வந்துள்ளார்.
உதவிச் செயலாளரை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அன்புடன் வரவேற்றார். "அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக வருகை தந்துள்ள அமெரிக்க உதவிச் செயலாளர் லிஸ் ஆலனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் " என்று தூதுவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆலன் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில், அரசாங்க அதிகாரிகள், ஊடக பிரதிநிதிகள், டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் ஊடக இடத்தைப் பாதுகாத்தல் குறித்து விவாதிப்பார். மேலும் தீவு தேசத்தின் செழிப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆராய்வார் என்று சுங் மேலும் கூறினார்.
தனது சிறிலங்காச் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, ஆலன் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.