Breaking News
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
தென்னகோன், சுமார் 20 நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்த பின்னர், மார்ச் 19 அன்று ஒரு மனுவை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலன பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது பிடியாணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த தென்னகோன், சுமார் 20 நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்த பின்னர், மார்ச் 19 அன்று ஒரு மனுவை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதேவேளை, தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.