வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புடன் சீனா வருமெனச் சிறிலங்கா நம்பிக்கை
கடந்த வாரம் சீனாவில் இருந்த சப்ரி, "நாங்கள் அவர்களுடன் பல சுற்று விவாதங்களை நடத்தியுள்ளோம்" என்று கூறினார்.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவுமென சிறிலங்கா நம்புகிறது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்கட்கிழமை தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக நம்பப்படுவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறினார்.
கடந்த வாரம் சீனாவில் இருந்த சப்ரி, "நாங்கள் அவர்களுடன் பல சுற்று விவாதங்களை நடத்தியுள்ளோம்" என்று கூறினார்.
இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து பாரிஸ் கடன்வழங்குநர்கள் மன்றம் (பாரிஸ் கிளப் ஆஃப் கிரெடிட்டர்ஸ்) உருவாக்கிய மேடையில் சீனர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கின்றனர் என்றார்.
"கடன் மறுசீரமைப்பில் சீனா எங்களுக்கு உதவும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று சப்ரி கூறினார்.