Breaking News
விஞ்ஞானம் அல்ல, அரசியல்தான் சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் சிக்க வைத்தது: எலான் மஸ்க்
"அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அங்கேயே விடப்பட்டனர். இது நல்லதல்ல" என்று எலான் மஸ்க் கூறினார்.

இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக விண்வெளியில் சிக்கித் தவிக்கிறார்கள், தொழில்நுட்ப அல்லது அறிவியல் காரணங்களுக்காக அல்ல என்று மஸ்க் புதன்கிழமை கூறினார். அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஃபாக்ஸ் நியூசு க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கூற்றுக்களை வெளியிட்டார்.
"அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அங்கேயே விடப்பட்டனர். இது நல்லதல்ல" என்று குடியரசுக் கட்சியின் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்த மஸ்க் கூறினார்.