முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்
சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சொகுசு வாகனமொன்று நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ கார் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நேற்று (23) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.