Breaking News
எஸ்.பி.பி வசித்து வந்த தெருவின் பெயர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலையென மாற்றம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் மெயின் ரோடு, அதிகாரப்பூர்வமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று அழைக்கப்படும். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.