Breaking News
ஒன்றிணைந்த சுற்றுலா திட்டத்தை தொடங்க சிறிலங்காவும் மாலத்தீவும் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டது.

மாலத்தீவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கூட்டு சுற்றுலா முயற்சியை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் ஆகியோருக்கிடையில் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.