Breaking News
பணய கைதிகள் குறித்து விவாதிக்க ரஷ்ய தூதர் கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை சந்திக்கக் கூடும்
போக்டானோவ் ஆர்ஐஏவிடம் தான் கத்தாருக்குச் செல்வதாகவும், ஒவ்வொரு முறையும் ஹமாசைச் சந்திப்பதாகவும் கூறினார்.
ரஷிய துணை வெளியுறவு மந்திரி மிகைல் போக்டானோவ் அடுத்த வாரம் கத்தாரில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளை சந்தித்து ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து விவாதிக்கலாம் என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ (RIA) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
போக்டானோவ் ஆர்ஐஏவிடம் தான் கத்தாருக்குச் செல்வதாகவும், ஒவ்வொரு முறையும் ஹமாசைச் சந்திப்பதாகவும் கூறினார்.
" அவர்கள் விரும்பினால், நாங்கள் எப்போதும் தொடர்பைப் பேணுகிறோம். மேலும், இந்த சூழ்நிலையில், பணயக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இது (சந்திப்பு) பயனுள்ளதாக இருக்கும்" என்று போக்டானோவ் கூறினார்.