மியன்மார் நாட்டுக்கு கடத்தப்பட்ட 8 குடிமக்கள் மீட்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மியன்மார் பிரதமரின் சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கிற்கு அனுப்பிய கடிதமொன்றை உள்ளடக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைத் தொடர்ந்து, மியன்மாரின் மையவாடி பிரதேசத்தில் உள்ள சைபர் குற்றத்தடுப்பு நிலையங்களில் சிக்கியுள்ள 56 பேரில் எட்டு (8) குடிமக்கள் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டு தற்போது மையவாடி மத்திய பொலிஸ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்டவர்களை விரைவில் திருப்பி அனுப்புவது குறித்து மியான்மரில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தற்போது செயல்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை (04) ஒரு அறிக்கையை வெளியிட்டது.
கடத்தப்பட்ட 56 இலங்கையர்கள் மியாவதி பிரதேசத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட எட்டு பேர் மியான்மர் அரசாங்கத்தால் அணுகக்கூடிய ஒரு பிரதேசத்தில் இருந்ததாகவும் மியன்மாரில் உள்ள சிறிலங்காத் தூதரகம் வழங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 பெப்ரவரி 22 ஆம் திகதி மியன்மார் வெளிவிவகார அமைச்சகத்திற்கு இராஜதந்திர வழிகள் ஊடாக மியன்மார் வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மியன்மார் பிரதமரின் சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கிற்கு அனுப்பிய கடிதமொன்றை உள்ளடக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.