Breaking News
இன்னும் 20 ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை
நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறிலங்காவில் இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே மக்கள் இப்போதே இதற்கு தயாராக வேண்டும் என அரச தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, சிறிலங்காவின் எதிர்காலம் குறித்து பேசிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, கல்வி முறையை மாற்றாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என மேலும் வலியுறுத்தினார்.