Breaking News
சிறிலங்காவின் எதிர்காலத்தை வடிவமைக்கப் பெண்கள் தலைமை தாங்க வேண்டும்: பிரதமர் ஹரிணி
கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நவீன உலகுக்குப் பொருத்தமான கூட்டுறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் எதிர்காலத்தை வடிவமைக்கப் பெண்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
புதிய சமூகமொன்றுக்கு தேவையான பண்பு ரீதியான மாற்றம் எம்மிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நவீன உலகுக்குப் பொருத்தமான கூட்டுறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரநாயக்க சுனந்தா கலையரங்கில் இடம்பெற்ற மகளிர் மன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.