Breaking News
ஹூதிகளின் செங்கடல் தாக்குதல்களால் உலகளாவிய வர்த்தகம் சீர்குலைவு
ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குப் பயணிக்கும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிய ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர்.
முக்கிய வர்த்தக பாதைகளான செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஏமனின் ஹூதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உலக வர்த்தகத்தை மோசமாக பாதித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குப் பயணிக்கும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிய ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர்.
ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதிகள், செங்கடலின் தெற்கு முனையில் உள்ள பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களை வாரக்கணக்காகத் தாக்கி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.