2023 ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் 5.2% வளர்ச்சி அடையும்: பிரதமர் லீ கியாங்
பெய்ஜிங் பாரிய தூண்டுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமின்றி சீனாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்று லீ வாதிட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் லீ கியாங், “2023 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் மதிப்பிடப்பட்ட 5.2% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட பெய்ஜிங்கின் இலக்கை விட அதிகமாகும்” என்றார்.
சீனப் பொருளாதாரம் நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், இது உலகளாவிய வளர்ச்சிக்கு "வலுவான உத்துவேகத்தை தொடர்ந்து வழங்கும் என்றும் வர்த்தகம் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் லீ கூறினார்.
"கடந்த ஆண்டு, சீன பொருளாதாரம் மீண்டு மேல்நோக்கி நகர்ந்தது" என்று அவர் செவ்வாயன்று தயாரிக்கப்பட்ட கருத்துகளில் கூறினார்.
கடுமையான கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சீனா தனது நிலையை மீண்டும் பெற போராடுவதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. டிசம்பரில் ஏற்றுமதியில் அதிகரிப்பை பதிவு செய்த போதிலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் பணவாட்ட அழுத்தங்கள், பலவீனமான நுகர்வோர் செலவினங்கள் மற்றும் நடந்து வரும் சொத்துத் துறை நெருக்கடியை தொடர்ந்து எதிர்கொள்கிறது, இது சில பகுப்பாய்வாளர்கள் கொள்கை வகுப்பாளர்களை அதிக ஆதரவு நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுக்கத் தூண்டுகிறது.
எவ்வாறெனினும், பெய்ஜிங் பாரிய தூண்டுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமின்றி சீனாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்று லீ வாதிட்டார்.
"நாங்கள் குறுகிய கால வளர்ச்சியை நாடவில்லை. அதே நேரத்தில் நீண்ட கால அபாயங்களைக் குவிக்கவில்லை," என்று அவர் கூறினார்.