அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானங்கள்
ரஷ்ய விமானப்படைக்குச் சொந்தமான 4 போர் விமானங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சு-34 ஜெட் மற்றும் ஒரு எம்ஐ-8 ஹெலிகொப்டர் இரண்டு மணி நேரத்திற்குள் ரஷ்ய நகரத்தின் அருகே விபத்துக்குள்ளாகி எரிந்தபடி கீழே விழுந்தன.
முதலில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது, சிறிது நேரத்தில் சு-34 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதுமட்டுமின்றி மேலும் இரண்டு ரஷ்ய போர் விமானங்களும் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் மர்மம் நீடிக்கிறது.
முதல் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளான கிளிண்ட்ஸ்கி நகரம் உக்ரைனிய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
மற்றொரு Mi-8 ஹெலிகாப்டரும், ஒரு Su-35 ஒற்றை இருக்கை போர் விமானமும் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் கீழே விழுந்தன.
பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வான் எதிர்ப்பு ஏவுகணைகளால் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று உக்ரைன் தரப்பு கூறுகிறது.
ஆனால், இலக்கு அடையாளம் காணும் அமைப்புகள் செயலிழந்ததால், நான்கு விமானங்களும் நட்புரீதியான தாக்குதலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ரஷ்ய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.