Breaking News
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்
1984 முதல் 2000 வரை, அகலவத்தை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.
குமார வெல்கம தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
1984 முதல் 2000 வரை, அகலவத்தை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.
குமார வெல்கம பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் 2007 முதல் 2010 வரை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், 2010 முதல் 2015 முற்பகுதி வரை போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.
2020 ஆம் ஆண்டு முதல் குமார வெல்கம புதிய லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வருகின்றார்.