Breaking News
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எஸ்.டி.ஐ.ஜி தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக மூன்று மாத காலத்திற்கு கடமையாற்றவுள்ளார். அவர் தனது புதிய பதவியில் முறையாக கடமைகளை ஏற்பார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.