இளவரசர் ஹாரியை நாடு கடத்தும் திட்டம் இல்லை: டிரம்ப்
"நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டு விடுவேன். மனைவியுடன் பல பிரச்னைகள் உள்ளன என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் கூறினார்.

சுயமாக நாடுகடத்தப்பட்ட பிரிட்டிஷ் அரச இளவரசர் ஹாரியின் குடியேற்ற அந்தஸ்தைச் சுற்றியுள்ள சட்ட சவால்கள் மற்றும் கேள்விகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சசெக்ஸ்சின் முன்னாள் கோமகனை நாடு கடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார். ஹாரி "தனது மனைவியுடன் போதுமான பிரச்சினைகள் உள்ளன" என்று டிரம்ப் குறிப்பிட்டார், மேலும் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
"நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டு விடுவேன். மனைவியுடன் பல பிரச்னைகள் உள்ளன. அவள் பயங்கரமானவள்" என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் கூறினார்.
டிரம்ப் ஏற்கனவே பெருந்திரளான நாடுகடத்தல்களைத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் மீது ட்ரம்பின் கடுமையான ஒடுக்குமுறையின் பின்புலத்தில் இளவரசர் ஹாரியின் விசா அந்தஸ்து குறித்த கேள்வியும் எழுந்துள்ளது,