Breaking News
பாரீஸ் ஒலிம்பிக்: ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3P போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையையும் குசலே பெற்றார்.
வியாழக்கிழமை நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3பி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3P போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையையும் குசலே பெற்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் இறுதிப் போட்டியில் குசேலே 451.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் 3வது பதக்கத்தை உறுதி செய்தார்.