இரத்தின தேரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சட்டப்படி செல்லாது: உயர் நீதிமன்றம்
அரசியல் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி கடிதம் மூலம் இரத்தின தேரரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் முடிவை அறிவித்திருந்தது.
வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தின தேரரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அபே ஜன பல பக்ஷய எடுத்த தீர்மானம் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இரத்தின தேரர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, ஜனக் டி சில்வா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி கடிதம் மூலம் இரத்தின தேரரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் முடிவை அறிவித்திருந்தது.
விஜய தரணி ஜாதிக சபாவா என்ற அமைப்பின் தலைவராக அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தனது கட்சிக்காரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அபே ஜன பல பக்ஷய ஒழுக்காற்றுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று மனுதாரரின் சட்ட ஆலோசகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். .
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, இரத்தின தேரரை அரசியல் கட்சியில் இருந்து வெளியேற்றும் அபே ஜன பல பக்ஷயவின் தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிபதி அமர்வு தீர்மானித்தது.