உங்கள் ஐபோன் இயங்குதளச் சாதனம் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி?
வல்லுநர்கள் 'பெகாசஸ்' போன்ற உளவு மென்பொருளைக் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.
'பெகாசஸ் மற்றும் அதன் புதிய வகைகளான 'ரீன் மற்றும் பிரிடேட்டர் போன்ற அதிநவீன ஐபோன் இயங்குதளச் சாதனம் (iOS) உளவு மென்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து பயனர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுவதற்காக, காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய, இலகுரக கண்டறிதல் முறையை வெளியிட்டுள்ளனர்.
காஸ்பர்ஸ்கை யின் வல்லுநர்கள், 'பெகாசஸ் நிரல்தொற்றுகள் எந்த ஐபோன் இயக்க முறைமை சாதனத்தின் சிஸ்டியாக்னோஸ் காப்பகத்திலும் அமைந்துள்ள ஷட்டவுன்.லாக் (Shutdown.log) எனப்படும் வழக்கத்திற்கு மாறான கணினி பதிவில் தடயங்களை விட்டுச்செல்கின்றன. இந்தக் காப்பகம் ஒவ்வொரு மறுதொடக்கத்திலிருந்தும் தரவைச் சேமித்து, பாதிக்கப்பட்ட சாதனம் மறுதொடக்கம் செய்யப்படும்போது, பெகாசஸால் ஏற்படும் முரண்பாடுகளைக் கண்டறிவதற்கான முக்கிய இடமாக இது அமைகிறது.
கூடுதலாக, வல்லுநர்கள் 'பெகாசஸ்' போன்ற உளவு மென்பொருளைக் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம் என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் தாக்குபவர்கள் அவர்களை உளவு பார்ப்பதை கடினமாக்குவதற்கு பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். காஸ்பர்ஸ்கை வல்லுநர்கள் உங்கள் ஐபோன் இயங்குதளச் சாதனத்தை உளவு மென்பொருளிலிருந்து பாதுகாக்க இந்த உதவிக்குறிப்புகளை பரிந்துரைக்கின்றனர்.
பெகாசஸ் சாதனத்தில் தங்காத பூஜ்ஜிய-கிளிக் தாக்குதல்களைப் பயன்படுத்துகிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் அலைபேசியை மறுதொடக்கம் செய்வதன் மூலம் உளவு மென்பொருளை அகற்றலாம். இது தாக்குபவர்களை மீண்டும் முயற்சி செய்ய வைக்கிறது. இதைப் பயனர்கள் கவனிக்க முடியும்.