Breaking News
மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு சுகாதார அமைச்சர் ஒப்புதல்
இது தொடர்பில் கண்டியில் இன்று (செப்.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ரம்புக்வெல்ல, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கண்டியில் இன்று (செப்.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ரம்புக்வெல்ல, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் இடைநிலைப் பட்டங்கள் வழங்குவது தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், மருத்துவம் படிக்கத் தகுதியுள்ள குழந்தைகள் பலர் உள்ளனர். ஆனால் நம் நாட்டில் 11 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. அவை போதுமானதாக இல்லை என்றார்.