அரிதான காட்சிகளில் முதல் முறையாக தாயின் குகையில் இருந்து வெளிவந்த துருவ கரடிக் குட்டி
துருவக்கரடி குடும்பங்கள் மார்ச் 9 அன்று ஸ்வால்பார்டில் வழக்கத்தை விட முன்னதாகவே தங்கள் குகையை விட்டு வெளியேறின.

செயற்கைக்கோள் கண்காணிப்பு காலர்கள் மற்றும் தொலைதூர கேமரா பொறிகளின் முதல் காட்சியை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜர்னல் ஆஃப் வைல்ட்லைஃப் மேனேஜ்மென்ட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், துருவக் கரடிக் குட்டிகளின் குகையிலிருந்து வெளியே வரும் நேரம் மற்றும் வெளிப்பட்ட பிந்தைய நடத்தைகள் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
துருவ கரடி குடும்பங்கள் மார்ச் 9 அன்று ஸ்வால்பார்டில் வழக்கத்தை விட முன்னதாகவே தங்கள் குகையை விட்டு வெளியேறின. இது ஒரு தொடர்ச்சியான போக்கா இல்லையா என்பதை தீர்மானிக்க மேலும் ஆய்வு தேவை. அப்படி இருந்தால் துருவ கரடிகளின் எண்ணிக்கை கேள்விக்குறியாகி விடும்.
சில துருவ கரடிகள் தங்கள் குகைக்கு அருகில் இரண்டு நாட்களும். சில கரடிகள் 31 நாட்களும் இருக்கும். சில சமயம் சராசரியாக 12 நாட்கள் இருக்கும். சில துருவக்கரடி தாய்மார்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒரு குகையில் இருந்து மற்றொரு குகைக்கு நகர்வதைக் காண முடிந்தது.