Breaking News
வடக்கில் 244 'மாவீரர் நாள்' கொண்டாட்டங்கள் அனுசரிப்பு
நவம்பர் 21 முதல் 27 வரை 'மாவீரர் நாள்' வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 244 'மாவீரர் நாள்' நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, நவம்பர் 21 முதல் 27 வரை 'மாவீரர் நாள்' வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அவற்றில் 10 இடங்களில் மட்டுமே விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.