Breaking News
ஐஜிபி சி.டி. விக்கிரமரத்னவுக்கு மேலும் 3 மாதச் சேவை நீடிப்பு
பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவுக்கு இன்று முதல் 03 மாத காலச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சி.டி.விக்ரமரத்னவிற்கு பொலிஸ் மா அதிபர் பதவி நீடிப்பு வழங்கியுள்ளார் எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவுக்கு இன்று முதல் 03 மாத காலச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விக்கிரமரத்ன ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட சந்திப்பொன்று நேற்று (ஜூலை 09) ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு இடையில் இடம்பெற்றது.