Breaking News
வங்கதேசம், இந்தியா ராணுவங்களுக்கு இடையே கூட்டுறவை அதிகரிக்க வங்கதேசப் பிரதமர் ஹசீனா அழைப்பு
இரு அண்டை நாடுகளின் ராணுவத்தினரிடையே கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஹசீனா கூறினார்.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். இரு அண்டை நாடுகளின் ராணுவத்தினரிடையே கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஹசீனா கூறினார்.
செவ்வாயன்று இந்திய இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே வங்காளதேச நாடாளுமன்றத்தில் உள்ள ஜாதியா சங்சாத் அலுவலகத்தில் அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.