ஊடகவியலாளர் தொடர்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட எஸ் வீ சேகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புகார்தாரரை அணுகவும், நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வற்புறுத்தவும் எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர் நான்கு வார கால அவகாசம் கோரினார்.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது கண்ணியத்தை நேரடியாக தாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என் கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த விசாரணை வரை சரணடைவதில் இருந்து சேகருக்கு விலக்கு அளித்தபோது, அவரது நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியது. அவர் உண்மையான மன்னிப்பு கேட்கவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
"முதலில், நீங்கள் இதைத் தொடர்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு பெண்ணுக்கு எதிராக நீங்கள் நடத்திய மோசமான பிரச்சாரம். நீங்கள் அவரது கண்ணியத்தை நேரடியாகவும், திமிர்த்தனமாகவும் தாக்கினீர்கள்" என்று அமர்வு கூறியது.
புகார்தாரரை அணுகவும், நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வற்புறுத்தவும் எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர் நான்கு வார கால அவகாசம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்த விசாரணை வரை சரணடைய விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது.