Breaking News
புதிய அபிவிருத்தி சகாப்தத்தை உருவாக்க சிறிலங்காவுடன் நெருக்கமாக பணியாற்ற சீனா தயார்: ஷீஜின்பிங்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சீன அதிபர், பல தசாப்தங்களாக நிலவிவரும் நெருக்கமான நட்புறவை எடுத்துக் காட்டினார்.

புதிய அபிவிருத்தி யுகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சிறிலங்காவுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு சீனா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஷீஜின் பிங் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி ஜின் பிங் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சீன அதிபர், பல தசாப்தங்களாக நிலவிவரும் நெருக்கமான நட்புறவை எடுத்துக் காட்டினார்.
எதிர்காலத்திலும் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை தொடர்வதற்கான சீனாவின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ஷீஜின் பிங் மீண்டும் வலியுறுத்தினார்.