Breaking News
மணிப்பூரில் 246 ஆயுதங்களை மெய்தேயி குழு ஒப்படைத்தது
காவல்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, காலக்கெடுவின் இறுதி நாளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலம் முழுவதும் மொத்தம் 307 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஆளுநர் அஜய் பல்லா நிர்ணயித்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருப்பித் தருவதற்கான அதிகாரப்பூர்வக் காலக்கெடு வியாழனன்று முடிவடையவுள்ள நிலையில், மணிப்பூரில் உள்ள முக்கிய மெய்தேயி kகுழுவான அரம்பாய் தெங்கோல் வியாழக்கிழமை தானாக முன்வந்து 246 ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தது.
காவல்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, காலக்கெடுவின் இறுதி நாளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலம் முழுவதும் மொத்தம் 307 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அவற்றில், 1 வது மணிப்பூர் ரைபிள்ஸ் வளாகத்தில் 246 ஆயுதங்கள் அரம்பாய் தெங்கோல் குழுவால் ஒப்படைக்கப்பட்டன. அதே நேரத்தில் 61 பள்ளத்தாக்கு மற்றும் மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஒப்படைக்கப்பட்டன.