Breaking News
காபூல் குண்டுவெடிப்பில் ஹக்கானி குடும்பத்தைச் சேர்ந்த தலிபான் அமைச்சர் பலி
ஹக்கானியின் கொலைக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தலிபான்களின் அகதிகள் மற்றும் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி புதன்கிழமை காபூலில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என்று அவரது மருமகன் தெரிவித்தார். செல்வாக்கு மிக்க ஹக்கானி குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தாலிபானின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் மாமாவுமான ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் அகதிகள் நெருக்கடியை நிர்வகித்து வந்தார்.
ஹக்கானியின் கொலைக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். "நாங்கள் மிகவும் துணிச்சலான முஜாஹித்தை இழந்துவிட்டோம்" என்று அவரது மருமகன் அனஸ் ஹக்கானி செய்தி நிறுவனமான ராய்ட்டர்சிடம் அவரையும் அவரது தியாகத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று கூறினார்.