Breaking News
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
கொழும்பில் நேற்று மாலை தொழிலாளர் போராட்ட மையம் மற்றும் கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தரிந்து உடுவரகெதரவிற்கு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று மாலை தொழிலாளர் போராட்ட மையம் மற்றும் கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொரளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு உடுவரகெதரவிற்கு விஜயம் செய்திருந்தார்.