காண்டாமிருகக் கொம்புகளை வேட்டையாடுவதைத் தடுக்கத் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் முயற்சி
ரைசோடோப் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, எல்லைச் சாவடிகளில் கொம்புகளைக் கண்டறிவதை எளிதாக்குவதையும், அவற்றை மனித நுகர்வுக்கு பயனற்றதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காண்டாமிருக வேட்டையைத் தடுக்கும் ஒரு புதுமையான முயற்சியில், தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் உயிருள்ள காண்டாமிருக கொம்புகளில் கதிரியக்கப் பொருளைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ரைசோடோப் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, எல்லைச் சாவடிகளில் கொம்புகளைக் கண்டறிவதை எளிதாக்குவதையும், அவற்றை மனித நுகர்வுக்கு பயனற்றதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு மற்றும் சுகாதார இயற்பியல் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் லார்கின் தலைமையில், இந்த திட்டம் 20 காண்டாமிருகங்களின் கொம்புகளில் இரண்டு சிறிய கதிரியக்க சில்லுகளை செருகுவதை உள்ளடக்கியது.
குறைந்த அளவிலான கதிரியக்க பொருள் விலங்குகளுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்காமல் பன்னாட்டு எல்லைகளில் கதிர்வீச்சு உணர்விகளால் (சென்சார்) கண்டறியக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கப் பொருள் கொம்பில் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் கொம்பு நீக்குவதை விடச் செலவு குறைந்த தீர்வாக அமைகிறது. கூடுதலாக, குழு மேலும் அடையாளம் காண ஒவ்வொரு சிகிச்சையளிக்கப்பட்ட கொம்பிலும் 11,000 நுண்புள்ளிகளைத் (மைக்ரோடாட்டு) தெளித்தது.
திட்டம் முன்னோக்கி நகரும்போது, விஞ்ஞானிகள் காண்டாமிருகங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, விலங்குகள் திறம்பட பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இரத்த மாதிரிகளை சேகரிப்பார்கள். இந்த புதுமையான அணுகுமுறை வெற்றிகரமாக இருந்தால், காண்டாமிருக வேட்டை மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த புதிய கருவியை வழங்க முடியும்.