எகிப்து எல்லை அருகே 3 இஸ்ரேலிய வீரர்கள், எகிப்திய காவலர்கள் கொல்லப்பட்டனர்
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டாக விசாரணை நடத்தி வருவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

"சனிக்கிழமையன்று நடந்த ஒரு சம்பவத்தில் நாடுகளின் எல்லைக்கு அருகில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் ஒரு எகிப்திய பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் எகிப்து கூறியது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டாக விசாரணை நடத்தி வருவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
எகிப்து மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் சம்பவத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
"ஓய்வு நாளில் எகிப்து எல்லையில் நடந்த மரண சம்பவம் தீவிரமானது மற்றும் அசாதாரணமானது, இது முழுமையாக விசாரிக்கப்படும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.