இந்திய குடியரசு துணைத் தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருடன் ஏ.கே.டி. சந்திப்பு
பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயத்தின் முன்னேற்றங்கள் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய கலந்துரையாடல்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கரை திங்களன்று (16) பிற்பகல் சந்தித்தார்.
சிறிலங்காவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றமைக்காக ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் தனது வாழ்த்துக்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயத்தின் முன்னேற்றங்கள் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய கலந்துரையாடல்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.
பின்னர் ஜனாதிபதி திசாநாயக்க இந்திய சுகாதார அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஜகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.