மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.
மகாராஷ்டிர துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றனர். மகாயுதி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்ட தலைவர்கள் மேடையில் இணைந்தனர்.
மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வியாழக்கிழமை பதவியேற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பட்னாவிஸ் முதல்வராக திரும்பியதையடுத்து, ஆசாத் மைதானத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
மகாராஷ்டிர துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றனர். மகாயுதி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்ட தலைவர்கள் மேடையில் இணைந்தனர்.
மும்பையில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அனந்த் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.