பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழு ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு
பன்னாட்டு நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றி ஆட்சி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என்று திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை சந்தித்தனர்.
பிரஜைகளின் கஷ்டங்களை கருத்திற்கொண்டு சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி பன்னாட்டு நாணய நிதியத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பன்னாட்டு நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றி ஆட்சி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என்று திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மையை ஒழித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் கடுமையான சீர்திருத்தங்களுடன் ஊழலை எதிர்த்துப் போராடுதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்தார்.